உலக செய்திகள்
இஸ்ரேலின் யதார்த்தமற்ற கூகுள் விளம்பரப் பிரச்சாரத்தை நிராகரித்த UNRWA

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி (UNRWA) கூகுளில் தோன்றும் இஸ்ரேலிய விளம்பரங்களில் தனக்கு எதிராகக் கூறப்பட்ட கூற்றுகள் “யதார்த்தமற்றது” என்று நிராகரித்துள்ளது.
UNRWA செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ஃபோலர், ஐ.நா. ஏஜென்சியின் ஊடுருவல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறினார்.
காசாவில் போரின் போதும் அதற்கு முன்னரும் நடுநிலை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரணைகளை நடத்தி சரியான நடவடிக்கை எடுத்ததாக ஃபோலர் மேலும் கூறினார்.
காசாவை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மீதான அக்டோபர் 7ம் தேதி நடவடிக்கையில் ஏஜென்சி ஊழியர்கள் எவரும் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
#tamilgulf