அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: இன்று முதல் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்

அஜ்மானில் உள்ள ஒரு முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 29 சனிக்கிழமை முதல் எமிரேட் ஷேக் சயீத் சாலையில் போக்குவரத்து மாற்றப்படும் என்று அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வீதியில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மாற்றுப்பாதையின் போது போடப்படும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
#tamilgulf