காசாவிற்கு மிகப்பெரிய உதவி கப்பலை அனுப்பிய UAE

ஆபரேஷன் கேலண்ட் நைட் 3-ன் ஒரு பகுதியாக UAE காசாவிற்கு தனது மிகப்பெரிய உதவி கப்பலை அனுப்பியுள்ளது. ஜூலை 8 அன்று புறப்பட்ட கப்பல் மொத்தம் 5,340 டன் சரக்குகளை சுமந்து செல்கிறது. இது மனிதாபிமான நடவடிக்கையில் மிகப்பெரிய விநியோகம். இதில் 4,750 டன் உணவுப் பொருட்களும், 590 டன் தங்குமிடப் பொருட்களும் அடங்கும்.
இந்த சமீபத்திய உதவிக் கப்பல், எகிப்தின் அல் அரிஷ் நகருக்குச் சென்று, அங்கிருந்து பாலஸ்தீனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எமிராட்டிக் கப்பல்களின் வரிசையில் நான்காவது கப்பல் ஆகும். முன்னதாக, மூன்றாவது ஐக்கிய அரபு எமிரேட் உதவிக் கப்பல் மார்ச் மாதம் புறப்பட்டது, காசா பகுதிக்கு 4,630 டன் மனிதாபிமான பொருட்களை ஏற்றிச் சென்றது.
கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக 15 நாட்களுக்குள் எகிப்தில் உள்ள அல் அரிஷ் துறைமுகத்தை அடைந்து, அங்கிருந்து பாலஸ்தீனத்திற்கு உதவிகள் கொண்டு செல்லப்படும்.
4,750 டன் உணவுப் பொருட்களில் 100 பைகள் தேநீர், 1.5 லிட்டர் சமையல் எண்ணெய், 400 கிராம் மக்ரோனி, 2 கிலோ சர்க்கரை, 5 பை கொண்டைக்கடலை, 5 கேன் பீன்ஸ், 3 கேன் சூரை, 1 கிலோ டேபிள் சால்ட் மற்றும் 1 கிலோ சிவப்பு பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன.
தங்குமிடப் பொருட்களில் கூடாரங்கள், பெண்களுக்குத் தேவையான பொருட்களுடன் பிரத்யேகமான பைகள், குழந்தைகளுக்கான பைகள், போர்வைகள், கொசுவலைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள். இதில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்தும் அடங்கும்.
கேப்டன் உட்பட 34 பேர் கொண்ட குழுவினருடன், இந்த சமீபத்திய உதவிக் கப்பல் நேற்று அல் அரிஷுக்குப் புறப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ் ரெட் கிரசண்ட், சயீத் தொண்டு அறக்கட்டளை மற்றும் கலீஃபா அறக்கட்டளை உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் உதவிக் கப்பலில் பங்களித்துள்ளன.