Site icon Tamil Gulf

ஆஃப்-ரோடிங் செல்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

offroad zone Notice of terms to be observed before going off-roading

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் ஆஃப்-ரோடிங்கை அனுபவிப்பதற்கும், பாலைவன முகாமுக்குச் செல்வதற்கும் தயாராக இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகள் (Offroad Zone) சமூக உறுப்பினர்களுக்கு விதிகளை கவனிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், குன்றுகளில் ஆபத்தான வாகனம் ஓட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

குற்றவாளிகள் 23 போக்குவரத்து கருப்பு புள்ளிகளுடன் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 60 நாட்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். இந்த விளைவுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுவது மற்றும் பொது அல்லது தனியார் வசதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் எவருக்கும் பொருந்தும்.

வனப்பகுதி மற்றும் பாலைவனப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொறுப்பை பொறுப்படுத்தாமல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

நவம்பர் 17 அன்று ஒரு ஆசிய இளைஞன் பாலைவனப் பகுதியில் உயிரிழந்த சோகமான சம்பவத்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version