Site icon Tamil Gulf

UAE: ஜெபல் ஜெய்ஸில் இன்று 6.6ºC வெப்பநிலை பதிவு

Lowest temperature of the year recorded in UAE today

UAE-ல் முந்தைய 8.8ºC வெப்பநிலை சரிவுக்குப் பிறகு, நாடு இன்று 6.6ºC என்ற புதிய குளிர்ச்சியை பதிவு செய்தது. இது நாட்டில் அதிகம் பார்வையிடப்பட்ட மலைத்தொடர்களில் ஒன்றான ஜெபல் ஜெய்ஸில் பதிவாகியது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி இன்று காலை 6 மணியளவில் ராஸ் அல் கைமாவில் உள்ள மலைகளில் 6.6ºC வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளான ரக்னாவில் 7.3ºC, மெப்ரே மலையில் 8.9ºC, ஜபல் அல் ரஹ்பாவில் 9.2ºC மற்றும் தம்தாவில் 10.2ºC வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இனிமையான வானிலைக்கு நன்கு அறியப்பட்ட ஜெபல் ஜெய்ஸ் குளிர்கால மாதங்களில் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது. இந்த முறை, அதிகாரப்பூர்வ குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே குறைந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது

நிபுணர்களின் கூற்றுப்படி டிசம்பர் 21 க்குப் பிறகு குளிர்காலம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version