Site icon Tamil Gulf

கென்யாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 டன் அவசர நிவாரண உதவி வழங்கிய UAE

UAE citizens in Vienna urged to be cautious due to heavy rain

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கென்யாவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட 200 டன் நிவாரண உதவிகளைக் கொண்ட ஐந்து விமானங்களை அனுப்பியுள்ளது.

நூற்றுக்கணக்கான மரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம் பெயர்ந்த வெள்ளம் மற்றும் நாடு முழுவதும் பெய்த கனமழையின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக $15 மில்லியன் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்ட ஜனாதிபதி ஷேக் முகமதுவின் அறிவிப்பை தொடர்ந்து இந்த உதவி அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி ஷேக் முகமதுவின் உத்தரவின் பேரில், ஐந்து விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வளர்ச்சி மற்றும் சர்வதேச அமைப்புகளின் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் சுல்தான் அல் ஷம்சி எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய உறவுகளின் ஒரு பகுதியாக, உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண உதவிகளை விமானம் கொண்டு செல்கிறது. சமீபத்திய வெள்ளத்தின் கடுமையான விளைவுகளைத் தணிப்பதில் கென்யாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒற்றுமையை இது பிரதிபலிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து தேவையான மனிதாபிமான உதவிகளையும், வெள்ளத்தின் பாதிப்பை நிவர்த்தி செய்ய முன்கூட்டிய மீட்புத் திட்டத்தையும் வழங்கும் என்று அல் ஷம்சி உறுதிப்படுத்தினார்.

Exit mobile version