அமீரக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்லான் மாகாணத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
பலத்த பருவமழையால், டஜன் கணக்கான இறப்புகள் மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் (MoFA) ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். அத்துடன் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எங்களது பிராத்தனைகள் மற்றும் விருப்பங்களை தெரிவித்து கொள்கிறோம்.
#tamilgulf