Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த மாதம் இரண்டு வகையான மீன் பிடிக்க தடை

Two species of fish are banned in the UAE this month

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை, கோல்டன் ட்ரெவல்லி ( Gnathanodon speciosus ) மற்றும் பெயின்டட் ஸ்வீட்லிப்ஸ் ( Diagramma pictum ) ஆகிய மீன்களை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த மாதம் அவற்றின் இனப்பெருக்கம் ஆகும்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் (MoCCAE) வெளியிட்ட மந்திரி ஆணை எண் 24 ன் படி, சில வகை மீன்களை அவற்றின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடித்தல் மற்றும் வர்த்தகம் செய்வதற்கான விதிகளை விவரிக்கிறது, இந்த தீர்ப்பு 2026 வரை நீடிக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல் பகுதியில் மீன் வளங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வணிக மீன் பிடித்தலை ஒழுங்கு படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று MoCCAE தெரிவித்துள்ளது.

இந்த நோக்கத்திற்காக, அபுதாபி வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆணையம் அழிந்து வரும் சில வகையான மீன்களை வேட்டையாடுவதையும் சந்தைப்படுத்துவதையும் ஒழுங்கு படுத்துவதற்கான இரண்டு நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரமானது எமிரேட்ஸில் உள்ள அனைத்து மீன் சந்தைகளையும், வளாகங்களில் உள்ள மீன் கடைகளையும் உள்ளடக்கும்.

Exit mobile version