Site icon Tamil Gulf

11 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு பேர் கைது

Two foreigners arrested for possessing drugs

கடந்த வாரத்தில் 11 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு முயற்சிகளை ராசல் கைமா சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் நாட்டிற்கு வந்தபோது அவர்களின் பைகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுங்க அதிகாரிகள் இரு பயணிகளின் மீது சந்தேகம் கொண்டு, அவர்களது சாமான்களை முழுமையாக சோதனை செய்தனர். இதையடுத்து, தொழில் ரீதியாக கடத்தல் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட பொருட்களும் இரண்டு நபர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.
Exit mobile version