Site icon Tamil Gulf

இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

Light rain in some parts of UAE

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்று மாலை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காற்று லேசானது முதல் மிதமாக இருக்கும், அவ்வப்போது பலமாக காற்று வீச வாய்ப்புள்ளது. அரேபிய வளைகுடாவில் கடல் நிலைகள் மிதமானது முதல் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமான அலைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்று வீசுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடி, மின்னல் மற்றும் மழை ஆகியவை பார்வைத்திறனைக் குறைக்கும் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகள் சாலைகளில் வேகத்தை குறைக்கவும், தண்ணீர் தேங்கிய பகுதிகளை தவிர்க்கவும், கடல் மற்றும் கடற்கரைகளிலிருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version