Site icon Tamil Gulf

Today Weather: ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்; இரவு வானிலை ஈரப்பதமாக மாறும்

uae weather condition

Today Weather
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, இன்று வானிலை பொதுவாக சீராகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலையில் கடுமையான மூடுபனி ஏற்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் இன்று சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை சில பகுதிகளில், குறிப்பாக மேற்கு நோக்கி, மூடுபனி உருவாகும் வாய்ப்புடன் வானிலை ஈரப்பதமாக இருக்கும்.

லேசானது முதல் மிதமான காற்று வீச வாய்ப்புள்ளது.

நாட்டின் மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 11ºC ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 30ºC ஆகவும் வெப்பநிலை பதிவாகும்.

 

Exit mobile version