Site icon Tamil Gulf

வானிலை அறிவிப்பு: ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்; வெப்பநிலை மேற்கு நோக்கி குறையும்

Gulf News Tamil

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வானிலை இன்று சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். பகலில் சில கடலோர, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழையுடன் தொடர்புடைய சில வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை மேற்கு நோக்கி குறையும். இதன் காரணமாக இரவு மற்றும் வியாழன் காலை ஈரபதமாக இருக்கும், சில உள் மற்றும் வடக்கு பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது.

லேசானது முதல் மிதமான காற்று வீசும், அரேபிய வளைகுடாவில் கடல் மிதமானது முதல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் சற்று கொந்தளிப்பாகவும் இருக்கும்.

Exit mobile version