Site icon Tamil Gulf

Today Weather: நாடு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு

Scattered showers, thunderstorms and gusty winds are likely in Oman

UAE Today Weather:
இன்றைய தினம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ள மேகங்கள் தோன்றும். லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் வேகமாக வீசவும் வாய்ப்புள்ளது.

நாட்டில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். மெர்குரி அபுதாபியில் 26ºC ஆகவும், துபாயில் 27ºC ஆகவும் உயரும்.

இருப்பினும், குறைந்தப்பட்ச வெப்பநிலை அபுதாபியில் 16ºC ஆகவும், துபாயில் 19ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 7ºC ஆகவும் இருக்கும்.

இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை சில உள் பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும். அபுதாபியில் 45 முதல் 85 சதவீதம் வரையிலும், துபாயில் 40 முதல் 70 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் இருக்கும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடலின் நிலைமைகள் சற்று முதல் மிதமானதாக இருக்கும்.

Exit mobile version