அமீரக செய்திகள்
அபுதாபியில் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சரை சந்தித்த அதிபர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது, உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவை செவ்வாய்க்கிழமை வரவேற்றார்.
அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் ஷாதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன்களுக்கு சேவை செய்வதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் வகையில் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுத் துறைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவு குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தியது.
#tamilgulf