Site icon Tamil Gulf

குடும்பத்தினரை தாக்கிய நபர் 12 மணி நேரத்திற்குள் கைது

Arrested man in handcuffs

அரேபிய நபர் ஒருவர் துபாயில் அவரது வீட்டிலுள்ள குடும்பத்தினரை தாக்கியுள்ளார். இதன் விளைவாக ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் துபாய் காவல்துறை காயத்தின் தன்மையை ‘மிதமானது’ என்று விவரித்துள்ளது. காயமடைந்த நபருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் துபாய் போலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடைபெற்று 12 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பொது வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காத போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version