வரலாறு காணாத மழை பெய்த போது தனது கயாக்கில் 25 குடும்பங்களை காப்பாற்றிய நபர்
கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பலத்த மழை பெய்த போது எமிராட்டியர் ஒருவர் தனது பொழுது போக்கை மீட்புப் பணியாக மாற்றினார் . யூசுஃப் அல் ஃபீல் தனது சிறிய கயாக்கைப் பயன்படுத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 25 குடும்பங்களைக் காப்பாற்றினார்.
“அதிகாலை நான்கு மணியளவில் பள்ளத்தாக்கில் வெள்ளம் பெருக்கெடுத்து அந்தப் பகுதிக்குள் நுழைந்ததும், நீச்சல் தெரியாத தன் சகோதரனைக் காப்பாற்ற உதவ கோரி ஒரு பெண் தன் காரின் மேல் நின்று கொண்டிருப்பதைத் தெரிவிக்க என் சகோதரர் என்னை அழைத்தார். “அதிர்ஷ்டவசமாக, அனைத்து உபகரணங்களும் என் வீட்டில் இருந்ததால், நாங்கள் அவரைக் காப்பாற்றச் சென்றோம்.
யூசுப்பின் கயாக் சிறிய அளவாக இருந்த போதிலும், அந்த நேரத்தில் மீட்பு நடவடிக்கைக்கு சிறந்த தீர்வாக இருந்தது.
நாங்கள் கயாக்கின் மூலம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவினோம் என்று யூசுப் கூறினார்.
மக்களுக்கு உதவுவது, குறிப்பாக நெருக்கடி காலங்களில், எமிராட்டி மதிப்புகளின் ஒரு பகுதியாகும், நன்மை, தியாகம் மற்றும் கொடுப்பதில் உள்ள அன்பை நாங்கள் தனியாகக் கற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அதை எங்கள் தலைவர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம், கடவுள் அவர்களைப் பாதுகாத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பாதுகாக்கட்டும் என்று யூசுப் மேலும் கூறினார்.