இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி… இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது அரைஇறுதிப் போட்டி மழை காரணமாக 1:15 மணி நேரம் தாமதமாக இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இந்தியா அணி சார்பில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
172 ரன்கள் இலக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் இந்தியா அணி சார்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.