Site icon Tamil Gulf

சவுதி அரேபியாவின் மூன்றாவது உதவிக் கப்பல் எகிப்தில் உள்ள போர்ட் சேய்ட் வந்தடைந்தது!

6th Saudi aid ship sails to aid Palestinians in Gaza

போர்ட் சேய்ட், எகிப்து:
காசாவுக்கான சவுதி அரேபியாவின் மூன்றாவது உதவிக் கப்பல் எகிப்தில் உள்ள போர்ட் சேய்ட் வந்தடைந்தது.

ராஜ்யத்தின் உதவி அமைப்பான KSrelief மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று சவுதி செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் 1,246 டன் எடையுள்ள 300 பெரிய கொள்கலன்கள் உள்ளன. இதில் மருத்துவப் பொருட்களுடன் 200 கொள்கலன்களும், உணவு, குழந்தைகளுக்கான பார்முலா மில்க் மற்றும் தங்குமிடப் பொருட்களுடன் 100 கொள்கலன்களும் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவ KSrelief அனுப்பிய இரண்டு கப்பல்கள் இதே போன்ற சரக்குகளை ஏற்றிக்கொண்டு போர்ட் சேய்ட்-கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version