Site icon Tamil Gulf

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 691 கைதிகளை விடுவிக்க துபாய் ஆட்சியாளர் உத்தரவு

Dubai Women Establishment

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, துபாயின் சீர்திருத்த மற்றும் தண்டனை நிறுவனங்களில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 691 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்.

துபாயின் அட்டர்னி ஜெனரல் எஸ்ஸாம் இஸ்ஸா அல்-ஹுமைதான், மன்னிக்கப்பட்ட நபர்களை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் தலைவரின் ஆர்வத்தை இந்த மன்னிப்பு பிரதிபலிக்கிறது என்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் போது வாழ்க்கையில் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷன், துபாய் காவல்துறையுடன் இணைந்து, இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அல்-ஹுமைதான் கூறினார்.

Exit mobile version