Site icon Tamil Gulf

காசா மக்களுக்கு உதவ 93 டன் உதவிப் பொருட்களுடன் கத்தார் ஆயுதப் படை விமானங்கள் புறப்பட்டன

Qatari Armed Forces planes took off with 93 tonnes of aid to help the people of Gaza

தோஹா, கத்தார்
உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 93 டன் உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இரண்டு கத்தார் ஆயுதப் படை விமானங்கள் எகிப்தில் உள்ள அல் அரிஷ் நகருக்குச் சென்றன.

கத்தார் வளர்ச்சிக்கான நிதியம் (QFFD) மற்றும் கத்தார் ரெட் கிரசன்ட் சொசைட்டி (QRCS) மூலம் காசாவிற்கு கொண்டு செல்வதற்கான தயாரிப்பில் இந்த உதவி வழங்கப்பட்டது.

இன்றுவரை, 13 விமானங்கள் காசாவிற்கு மொத்தம் 492 டன் உதவிகளை வழங்கியுள்ளன.

காசா பகுதி மீது இஸ்ரேலிய படையின் குண்டுவீச்சு காரணமாக கடினமான மனிதாபிமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் சகோதர பாலஸ்தீனிய மக்களுக்கு கத்தார் அரசு முழு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உதவி உள்ளது.

Exit mobile version