Site icon Tamil Gulf

தேசிய தின கொண்டாட்டங்களை ஒத்திவைத்த கத்தார்!

Qatar Strongly Condemns Israel's Aggressive Bombing of UNRWA School in Gaza

தோஹா
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அக்டோபர் 7ம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வரும் நிலையில், காசாவுக்கு ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாக தேசிய தின கொண்டாட்டங்களை கத்தார் ஒத்திவைத்துள்ளது.

நவம்பர் 20, திங்கட்கிழமை X -ல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், கத்தார் துணைப் பிரதமரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணை அமைச்சருமான காலித் அல்-அத்தியா, இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேசிய தினத்தின் 53 வது ஆண்டு விழாவை ரத்து செய்யவது தொடர்பாக ஓமன் சுல்தான்ட் எடுத்த முடிவிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கத்தாரின் தேசிய தினம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கொண்டாடப்படுகிறது. கத்தார் இராணுவம் ஆண்டுதோறும் தேசிய தினத்தன்று “தேசிய அணிவகுப்பு” நிகழ்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version