Site icon Tamil Gulf

பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவுக்கு செல்கிறார்

Prime Minister Narendra Modi condoles those who lost their lives in the fire

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவுக்கு செல்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை வளைகுடா நாடு விடுதலை செய்த ஒரு நாள் கழித்து மோடியின் கத்தார் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்களில் 7 பேர் திங்கள்கிழமை காலை இந்தியா திரும்பினர்.

வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், இந்த வழக்கின் முன்னேற்றங்களை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார். “இந்தியர்களை விடுவிக்க கத்தாரின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக மோடியும் கத்தார் அமீரான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியும் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று வெளியுறவுச் செயலாளர் கூறினார்.

கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் 46 நாட்களுக்குப் பிறகு வெவ்வேறு கால சிறைத் தண்டனைக்கு மாற்றப்பட்டனர். எட்டு பேரும் உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர் ஆனால் கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தவில்லை.

Exit mobile version