Site icon Tamil Gulf

துபாயில் ஜனவரி 21 ஆம் தேதி பொங்கலோ பொங்கல் நிகழ்வு

Dubai:
இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பொங்கல் அன்று பாரம்பரிய ஆடைகளை அணிந்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தமிழ் மக்களுடன் பொங்கலை கொண்டாட விரும்பும் மக்களுக்காக பொங்கலோ பொங்கல்(Pongal O Pongal) நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும்.

Pongalo Pongal event on 21st January in Dubai

இந்த நிகழ்வு ஜனவரி 21 ஆம் தேதி, எடிசலாட் அகாடமி துபாயில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. இதில் பல தமிழ் திரை துறையினர் பங்கேற்கவுள்ளனர். எனவே, தமிழ் சொந்தங்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிகழ்வை பல நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான sandhai.ae முக்கிய பாட்னராக நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது.

sandhai.ae மூலம் தமிழ் மக்கள் தங்களது கலாச்சாரத்துடன் தொடர்புடைய பொருட்களை எளிதாக வாங்கி பயன்பெறலாம்.

Exit mobile version