Site icon Tamil Gulf

அபுதாபி-டப்ளின் விமானத்தில் பயணிக்கு அம்மை நோய் உறுதி; பயணிகளுக்கு எச்சரிக்கை

Passenger on Abu Dhabi-Dublin flight tests positive for measles; Warning to passengers

எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் அபுதாபியில் இருந்து டப்ளின் நோக்கி பயணித்த பயணி ஒருவருக்கு அம்மை நோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அயர்லாந்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்ககான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானத்தில் பயணம் செய்த பயணிகளை ஹெல்த் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் (HSE) அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல், சிவந்த கண்கள், கழுத்தில் சொறி மற்றும் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டினால், பயணிகளை வீட்டில் தனி அறையில் தங்கி மருத்துவ உதவியை நாடுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தட்டம்மை என்பது குழந்தைகளுக்கு மிகவும் பொதுவானது. இது காற்றின் மூலம் பரவும் மிகவும் மோசமான வைரஸ் தொற்றாகும். இது கடுமையான பாதிப்பை உருவாக்கும். பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும்போதும், ​​இருமல் அல்லது தும்மும்போதும் இது எளிதில் பரவுகிறது. தட்டம்மை தடுப்பூசி 2000 மற்றும் 2021 க்கு இடையில் 56 மில்லியன் இறப்புகளைத் தடுத்துள்ளது .

அம்மை நோயின் அறிகுறிகள் :-

1. பொதுவாக வைரஸ் தாக்கிய 10-14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும்.

2. சொறி – பொதுவாக காணக்கூடிய அறிகுறியாகும். இது நோய் தொற்று ஏற்பட்ட 7-18
நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது. சொறி பொதுவாக முகம், மேல் கழுத்தில்
தொடங்குகிறது.

3. மூக்கு ஒழுகுதல்.

4. இருமல்.

5. சிவப்பு மற்றும் நீர் நிறைந்த கண்கள்.

6. கன்னங்களில் சிறிய வெள்ளைப் புள்ளிகள்.

7. குருட்டுத்தன்மை.

8. கடுமையான வயிற்றுப்போக்கு.

9. காது தொற்று.

10. நிமோனியா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகள்.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.
Exit mobile version