Site icon Tamil Gulf

இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.5ºC பதிவு

uae weather report

இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு நோக்கி சில நேரங்களில் தூசி நிறைந்ததாக இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ் ஆகும். லேசானது முதல் மிதமானது வரை வீசும் காற்று, சில நேரங்களில் பலமாக வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலுக்கு மேல், வடக்கு நோக்கி வீசும்.

நாட்டில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். அபுதாபியில் 23ºC ஆகவும், துபாயில் 24ºC ஆகவும் மெர்குரி உயரும்.

இருப்பினும், குறைந்தப்பட்ச வெப்பநிலை அபுதாபியில் 16ºC ஆகவும், துபாயில் 17ºC ஆகவும், உள் பகுதிகளில் 4ºC ஆகவும் இருக்கும். அபுதாபி மற்றும் துபாயில் ஈரப்பதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருக்கும்.

அரேபிய வளைகுடாவில் கடலின் நிலைமைகள் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் லேசானதாகவும் இருக்கும்.

Exit mobile version