காசா பகுதியில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 32,623 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் 71 பாலஸ்தீனியர்களைக் கொன்றது மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததில் இருந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 32,623 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 75,092 ஆகவும் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.