அமீரக செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார்

அபுதாபி: பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷேபாஸ் ஷெரீப், வியாழன் அன்று அபுதாபிக்கு அரசுமுறை பயணமாக வந்தடைந்தார்.
அபுதாபியில் உள்ள அல் படீன் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் ஷெரீப்பை, துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற பிறகு ஷெரீப் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவருடன் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் உள்ளிட்ட அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது.
#tamilgulf