அமீரக செய்திகள்
தனியார் துறைக்கான ஈத் அல் அதா விடுமுறையின் தேதிகள் அறிவிப்பு
தனியார் துறைக்கான ஈத் அல் அதா விடுமுறையின் தேதிகள் ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை இருக்கும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, துல் ஹிஜ்ஜா 9 அன்று, இஸ்லாத்தின் புனிதமான நாளான அரஃபா தினத்தைக் குறிக்க ஒரு ஊதிய விடுமுறை வழங்கப்படுகிறது. இது கிரிகோரியன் நாட்காட்டியில் ஜூன் 15, சனிக்கிழமை அன்று வருகிறது.
துல்ஹிஜ்ஜா 10 முதல் 12 வரை அல்லது கிரிகோரியன் நாட்காட்டியில் ஜூன் 16 முதல் 18 வரை அனுசரிக்கப்படும் தியாகத் திருவிழாவான ஈத் அல் அதாவுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
#tamilgulf