Site icon Tamil Gulf

மாரத்தான் போட்டி காரணமாக அபுதாபியில் பல சாலைகள் இன்று தற்காலிகமாக மூடல்

Major roads will remain partially closed in Abu Dhabi until August 19

Abu Dhabi: அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC ) அட்நாக் அபுதாபி மராத்தானின் ஐந்தாவது பதிப்பிற்குத் தயாராகும் வகையில், அபுதாபியில் பல சாலைகளை டிசம்பர் 16 சனிக்கிழமையன்று தற்காலிகமாக மூடும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அபுதாபி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (அட்னோக்) இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்துகின்றன.

அபுதாபி போலீஸ் மற்றும் அபுதாபி ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் ஒத்துழைப்புடன், ஐடிசியின் போக்குவரத்து நிர்வாகக் குழு, ஐடிசியின் மத்திய கட்டுப்பாட்டு அறை மூலம் போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்கமைத்து நிர்வகிக்கும். கூடுதலாக, சாலைப் பயனாளர்களை வழிநடத்தவும், சாலை வலையமைப்பைக் கண்காணிக்கவும் நிலையான மற்றும் மொபைல் மின்னணுப் பலகைகள் இயக்கப்படும்.

சர்வதேச மராத்தானின் பாதைகள் நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என்பதை வலியுறுத்தும் வகையில், நிகழ்வின் பகுதியைச் சுற்றியுள்ள சாலைப் பயனர்களுக்கு ஆதரவாக சாலை சேவை ரோந்துகளை (RSP) ITC வழங்கும்.

கார்னிச் சாலை (இரு திசையிலும்), கிங் அப்துல்லா பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் தெரு (வெளியே செல்லும்), அல் பாடீன் தெரு (வெளியே செல்லும்), அல் கலீஜ் அல் அரபி தெரு (வெளியே செல்லும்), ஷேக் ரஷீத் பின் சயீத் தெரு (உள்ளே செல்லும்) அல் ஹோஸ்ன் அரண்மனையைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்படும் சாலைகள்.

பங்கேற்பாளர்கள் அபுதாபி கார்னிச்சில் உள்ள அட்னாக் தலைமையகத்திலிருந்து தொடங்கி, தலைநகரின் மிகவும் குறிப்பிடத்தக்க அடையாளங்களான ஷேக் சயீத் கிராண்ட் மசூதி, அல் பாடீன் அரண்மனை, அல் ஹோஸ்ன் அரண்மனை மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவற்றைக் கடந்து பைனுனா பூங்காவிற்கு அருகிலுள்ள ADNOC வளாகத்தில் முடிவடையும்.

ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் அனைத்து சாலை பயனாளர்களுக்கும், சமூகத்தின் உறுப்பினர்களுக்கும் தற்காலிக சாலை மூடல் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தற்காலிகமாக மூடும் போது இந்த சாலைகள் நடந்து செல்வதையும் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அல் கலீஜ் அல் அரபி தெரு, சுல்தான் பின் சயீத் முதல் தெரு, ஷேக் சயீத் சாலை (வெளியே செல்லும்) மற்றும் ஷேக் ரஷித் பின் சயீத் தெரு போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் ITC ஊக்குவித்துள்ளது.

Exit mobile version