படித்ததில் பிடித்தது

சிந்தனை கதை…. “மகாவீரர்” (Mahavira) வாழ்க்கை

சிந்தனை கதை.... "மகாவீரர்" வாழ்க்கை Mahavira life - A story of thought

ஒரு உண்மைக்கதை..!!

ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்…

அப்போது அவர் எதிரில் உடுத்த உடை
கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..

சுற்றுமுற்றும் பார்க்கிறார்.. உடனே அவர் தன் இடுப்பில் கட்டி
இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..

இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..

அங்கே பழைய ஜரிகை வியாபாரம்
செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்..

வணிகரும்.. ஆஹா..
இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே..
சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்… ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..

அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..

அவர் தன் வேட்டியை பக்கத்தில் கழட்டி வைத்து விட்டு தியானம் செய்து கொண்டிருக்க..

இதை வாய்ப்பாக பயன்படுத்தி மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்துகீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..

அந்நேரம் பார்த்து தியானத்தில் இருந்து கண் விழித்து பார்த்தவர். அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா..
நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்..

ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?

தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று
அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார்.

அப்படி நினைத்தவர் தான்
துறவி ‘மகாவீரர்’..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்…

ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?

அவரவர்..
மனநிலைக்கே…
விட்டுவிடுவோம்….!!

#tamilgulf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com