Site icon Tamil Gulf

ஷார்ஜா மற்றும் மஸ்கட்டை இணைக்கும் புதிய பேருந்து சேவை அறிமுகம்

Launch of new bus service connecting Sharjah and Muscat

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஓமன் இடையே ஒரு புதிய பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை ஷார்ஜா மற்றும் மஸ்கட்டை இணைக்கும் என்று பொது போக்குவரத்து நிறுவனமான Mwasalat அறிவித்துள்ளது.

ஓமானின் தேசிய போக்குவரத்து நிறுவனமான Mwasalat ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது பிப்ரவரி 27 முதல் தினசரி சேவைகளை தொடங்கும்.

ஷார்ஜா மற்றும் மஸ்கட்டில் இருந்து தலா இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்படும். ஷினாஸ் வழியாக இந்த சேவை செயல்படும்.

பயணிகள் 23 கிலோவை செக்-இன் சாமான்களாகவும், 7 கிலோ கைப் பேக்கேஜாகவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கட்டணங்கள் 10 ஓமன் ரியால்கள் (திர்ஹம்95.40) மற்றும் 29 ஓமன் ரியால்களில் (திர்ஹம்276.66) இருந்து தொடங்குகிறது.(1 ஓமானி ரியால்: Dh9.53)

ஷார்ஜாவில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு அஸைபா பேருந்து நிலையத்தை சென்றடையும். இரண்டாவது பஸ் ஷார்ஜாவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு மஸ்கட்டை சென்றடையும்.

இதற்கிடையில், மஸ்கட்டில் இருந்து முதல் பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு ஷார்ஜாவை சென்றடையும். இரண்டாவது மஸ்கட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.10 மணிக்கு அல் ஜுபைல் பேருந்து நிலையத்தை சென்றடையும்.

Exit mobile version