Site icon Tamil Gulf

50 பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்… 4 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது!

Israel-Palestine conflict

டெல் அவிவ்
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நாடு போரை நிறுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு 10 பணயக்கைதிகளையும் விடுவிப்பது சண்டையின் இடைநிறுத்தத்தை ஒரு நாள் நீட்டிக்கும் என்று கூறியுள்ளது.

புதன்கிழமை காலை, ஹமாஸ் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனிய கைதிகள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியது. மேலும், கைதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் நிவாரணம், மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான டிரக்குகள் நுழைவதையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியது என்று ஹமாஸ் அறிக்கை மேலும் கூறியுள்ளது.

காசாவில் குறைந்தது 236 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version