நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… 30,228 பலஸ்தீனர்கள் பலி!

காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் 193 பேரை கொன்றதால், பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 30,228 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து 71,377 பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று அமைச்சகம் கூறியது.
இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 193 பாலஸ்தீனியர்களைக் கொன்றதுடன் 920 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையான குண்டுவீச்சு மற்றும் சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் இல்லாததால் சில பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 147வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 10 நாட்களில் 450 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் ஹீப்ரு பொது வானொலி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை முழு வெற்றி அடையும் வரை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.