Site icon Tamil Gulf

IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வி

IPL 2024: Mumbai Indians lose first match

2013ஆம் ஆண்டு முதல், IPL-ல் முதல் போட்டியை தோற்பதை மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கமாக கொண்டுள்ளது.

குஜராத் அகமதாபாத் மைதானத்தில், முதலில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, சிறப்பாக பேட்டிங் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் 31 (22), சாய் சுதர்ஷன் 45 (39), ராகுல் தேவத்தியா 22 (15) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்கள் குறிப்பிடத்தக்க ரன் எடுக்காததால் குஜராத் டைடன்ஸ் அணியால் 168/6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், இஷான் கிஷன் 0 (4) டக்அவுட் ஆக அடுத்து ரோஹித் சர்மா 43 (29), நமர் தீர் 20 (10), டிவோல்ட் பிரேவிஸ் 46 (38), திலக் வர்மா 25 (19) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி, 6 பந்தில் 19 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளில் ஹர்திக் பாண்டியாவை 6,4 என ரன்களை அடிக்கவிட்டார். இருப்பினும், அடுத்த 2 பந்துகளில் ஹர்திக் மற்றும் சாவ்லாவை வெளியேற்றினார். கடைசி இரண்டு பந்துகளில் பும்ரா, முலானி இருவரும் தலா ஒரு ரன்னை அடிக்க, இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.

Exit mobile version