Site icon Tamil Gulf

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது; முதல் போட்டியில் சென்னை அணி மோதல்

IPL 2024: Which teams are likely to play-off?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி விளையாடுகிறது. இன்று வெளியிடப்பட்ட முதல் கட்ட ஐபிஎல் போட்டி அட்டவணையின்படி சென்னை அணி முதல் கட்டமாக 4 போட்டிகளில் மோதும்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி விளையாடும் 4 போட்டிகள்

News18

ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். மொபைலில் ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com இணைய தளம் மூலம் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 60 நாட்களாக போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டிகள் 67 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியிடப்பட்ட ஐபிஎல் முதல் கட்ட அட்டவணை

News18

Exit mobile version