அமீரக செய்திகள்
துபாயில் இன்று தங்கம் விலை குறைந்தது
செவ்வாய்கிழமை துபாயில் சந்தை துவங்கும் போது தங்கம் விலை குறைந்துள்ளது.
துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுகள் படி, செவ்வாயன்று ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு கிராமுக்கு 24K 286.75 திர்ஹமாக இருந்தது, திங்களன்று சந்தைகளின் முடிவில் 287.50 திர்ஹமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற வகைகளான 22K, 21K மற்றும் 18K ஆகியவையும் முறையே ஒரு கிராமுக்கு Dh265.5, Dh257 மற்றும் Dh220.25 என்ற அளவில் குறைந்துள்ளது.
உலகளவில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.14 சதவீதம் அதிகரித்து 2,365.1 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.
#tamilgulf