Site icon Tamil Gulf

ஏவுகணைகளை சவுதி அரேபியாவிற்கு விற்க ஜெர்மன் அரசு ஒப்புதல்

Germany approves sale of missiles to Saudi Arabia

ஜமால் கஷோகி கொல்லப்பட்டதில் இருந்து தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை சவுதி அரேபியாவிற்கு விற்க ஜெர்மனி அரசு தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஹெய்ப்ஸ்ட்ரீட், Der Spiegel நாளிதழால் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் இதனை உறுதிப்படுத்தினார், சவுதி அரேபியாவிற்கு 150 Iris-T ஏர்-டு ஏர் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய பெர்லின் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கூறிய ஏவுகணைகள் “விமானத்தில் இருந்து வான்வழி இலக்குகள், அதாவது ஏவுகணைகள், விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றில் இருந்து ஏவப்படலாம்” என்றும் அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மன் “டெல் டிஃபென்ஸ்” குழுவால் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய ஜெர்மன் அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக Der Spiegel தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2018 இல் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசாங்கத்தால் இந்தத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version