Site icon Tamil Gulf

ஷார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கில் திடீர் தீ விபத்து

A sudden fire broke out in a warehouse in Sharjah Industrial Park

ஷார்ஜாவின் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பயன்படுத்திய கார் உதிரி பாகங்களை சேமித்து வைத்திருக்கும் கிடங்கில் தீப்பிடித்தது குறித்து ஷார்ஜா காவல்துறை கட்டுப்பாட்டுஅறைக்கு பிற்பகல் 3.34 மணிக்கு முதல் தகவல் கிடைத்தது. அண்டை நாடான அஜ்மான் வரை தெரிந்த அந்த தீயானது வானத்தில் அடர்த்தியான, கரும் புகையை எழுப்பியது.

ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி, சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவுவதைத் தடுத்தனர்.

இந்த சம்பவத்தில் காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை.மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Exit mobile version