Site icon Tamil Gulf

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் மகள் பலி

Items you should never leave in your vehicle this summer

ஷார்ஜா:
ஷார்ஜாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், அவரது 11 வயது மகளும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் மனைவி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அல் காசிமி மருத்துவமனையின் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தம்பதியரின் மற்ற இரண்டு குழந்தைகளான ஒன்பது வயதுடைய ஒரு பெண் மற்றும் ஐந்து வயது பையன், இப்போது குணமடைந்து வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு முவைலே பகுதியில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது என்று ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் சமி காமிஸ் அல் நக்பி தெரிவித்தார்.

“அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் புகை கட்டிடம் முழுவதும் பரவியது, இதனையடுத்து மூன்றாவது மாடி கட்டிடத்தில் இருந்த மற்ற குத்தகைதாரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதிகாலை 2.08 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதிகாலை 2.12 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் பிரிகேடியர் அல் நக்பி தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை, தடயவியல் குழு விசாரணைக்காக இடத்தை கைப்பற்றியுள்ளது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து கட்டிடத்திற்கு சீல் வைத்துள்ளனர். தேசிய ஆம்புலன்ஸ் குழுவினரும் சம்பவ இடத்தில் இருந்தனர்.

ஷார்ஜா சமூக சேவைகள் துறை, குழந்தைகள் மற்றும் குடும்ப பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதியும் மூச்சுத் திணறலில் இருந்து மீண்டு வரும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

Exit mobile version