அல் மக்தூம் விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளை மாற்றும் எமிரேட்ஸ்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு 2034 ம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்படும் என்று எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்தார்.
“D33 திட்டத்தின் ஒரு பகுதியாக 2034 ம் ஆண்டுக்குள் அல் மக்தூம் விமான நிலையத்திற்கு இடம் பெயர்வோம். இடமாற்றம் துபாய் இன்டர்நேஷனலில் இருந்து அல் மக்தூம் விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் நடக்கும் என்று ஷேக் அகமது கூறினார்.
“உள்ளூர் விமான நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சியைப் பூர்த்தி செய்ய இந்த புதிய விமான நிலையம் காலத்தின் தேவை. சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட புதிய விமான நிலையத்தின் வெற்றியைப் பற்றி நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். துபாய் எப்போதும் எல்லா துறைகளிலும் இலக்குகளை தாண்டியது. இந்த விமான நிலையம் இல்லாமல், துபாய் பின்னோக்கி செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். கப்பற்படைக்குள் வரும் அனைத்து விமானங்களுக்கும் வாயில்கள் மற்றும் பார்க்கிங் தேவை, தற்போதுள்ள வசதியுடன், இது சவாலாக இருக்கும்,” என்றார்.
துபாய் இன்டர்நேஷனல் (DXB) ன் அனைத்து செயல்பாடுகளும் அடுத்த சில ஆண்டுகளில் அல் மக்தூம் இன்டர்நேஷனலுக்கு (DWC) மாற்றப்படும் என்று கடந்த வாரம் துபாய் அரசாங்கம் அறிவித்தது . துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் ஒரு புதிய Dh128 பில்லியன் பயணிகள் முனையம் ஆண்டு தோறும் 260 மில்லியனாக பயணிகளின் திறனை அதிகரிக்கும் மற்றும் 10 ஆண்டுகளில் DXB ன் செயல்பாடுகளை முழுமையாக உள்வாங்கும்.