Site icon Tamil Gulf

குவைத் எமிர் மறைவு: ஐக்கிய அரபு அமீரகம் 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவிப்பு

UAQ Ruler Condolences on Death of Sheikh Ahmed Bin Abdullah

குவைத்தின் எமிர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா மறைவுக்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், சனிக்கிழமை மூன்று நாள் தேசிய துக்கக் காலத்தை அறிவித்தார்.

ஷேக் முகமது பின் சயீத், நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், வெளிநாடுகளில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகங்களிலும், இன்று முதல் அரைக் கம்பத்தில் கொடிகளை பறக்கவிடுமாறு உத்தரவிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், X -ல் வெளியிட்ட ஒரு பதிவில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா ஆறு தசாப்தங்களாக தனது நாட்டிற்கு சேவை செய்தார், மேலும் அவரது பங்கை முழு மனதுடன் நிறைவேற்றினார்,” என்று பதிவிட்டார்.

தற்போது 83 வயதாகும் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர், உலகின் மிக வயதான இளவரசராக கருதப்படுகிறார். அவர் குவைத்தின் ஆட்சியாளராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version