சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் பஸ் துபாயில் சோதனை
ஸ்வைடன் டிரேடிங் நிறுவனத்துடன் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் பஸ் துபாயில் சோதனை செய்யப்படும்.
ஹைட்ரஜன் எரிபொருளை செலுத்தும் பேருந்துகள், எமிரேட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளில் சோதனை செய்யப்பட்டு, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதா என சோதிக்கப்படும். ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி மற்றும் வழங்கல், ஹைட்ரஜன் சப்ளையர் ENOC மற்றும் பிற கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து, சாத்தியமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான சோதனைப் பகுதியாக இருக்கும்.
இந்த பேருந்துகள் “நீண்ட தூர பயணத்திற்கு எரிபொருள் மூலமாக ஹைட்ரஜனை நம்பியிருக்கும். அவை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போக்குவரத்துக்கான நிலையான எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன” என்று RTA ன் பொது போக்குவரத்து முகமையின் CEO Ahmed Hashem Bahrozyan கூறினார்.
அவர் ஹைட்ரஜனின் தனித்துவமான பண்புகளை எடுத்துக்காட்டி, “இது இலகுரக மற்றும் டீசல் எரிபொருளை விட மூன்று மடங்கு ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் உமிழ்வுகளை உருவாக்கவில்லை” என்று கூறினார்.
ஹைட்ரஜன் பேருந்தில் சீன நிறுவனமான Zhongtong Bus Holding Co. Ltd. ன் எரிபொருள் செல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, என Bahrozyan கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் பஹ்ரோசியன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்வைதான் அல் நபூதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
துபாய் எமிரேட்டில் பஸ் பயணிகள் சேவையை மேம்படுத்துவதற்கு, தொடர்ச்சியான முன்னேற்றத்தின் பகுதிகளை அடையாளம் காணவும், புதுமையான தீர்வுகளை வழங்கவும் ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து RTA கருத்து கேட்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.