Site icon Tamil Gulf

தொலைந்து போன லக்கேஜ்களை விற்பதாகக் கூறும் மோசடி குறித்து DXB எச்சரிக்கை

DXB record to welcome 44.9 million guests in first six months of 2024

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தொலைந்து போன லக்கேஜ்களை விற்பதாகக் கூறும் போலி சமூக ஊடகப்பதிவு குறித்து பயணிகளுக்கு மோசடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள், துபாய் விமான நிலையத்துடன் தொடர்புடையதாகக் கூறி, தொலைந்து போன லக்கேஜ்களை திர்ஹாம் 8 (ரூ. 180) போன்ற குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்குகின்றன.

“பணத்தைச் சேமிக்கத் தயாரா? தொலைந்து போன சாமான்களை தூக்கி எறியாமல் விற்க முடிவு செய்தோம். எனவே சூட்கேஸ்களை 8 AEDக்கு மட்டுமே விற்பனை செய்கிறோம். தொலைபேசிகள், மடிக்கணினிகள், நகைகள், பணம் – மற்றும் பிற அற்புதமான ஆச்சரியங்கள் – பெரும்பாலும் சூட்கேஸ்களுக்குள் காணப்படுகின்றன. தொலைந்த லக்கேஜை இப்போதே ஆர்டர் செய்து, உங்கள் பரிசை சூட்கேஸுக்குள் கண்டுபிடியுங்கள்” என்று போலிக் கணக்கில் பதிவிட்டிருந்தது.

Gulf News Tamil

இந்த பதிவு குறித்து துபாய் விமான நிலையம் X-ல் கூறியுள்ளதாவது:- “Facebook மற்றும் Instagram -ல் தொலைந்து போன சாமான்களை விற்பதாகக் கூறும் போலி சுயவிவரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம், அது நாங்கள் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்! எனவே, சந்தேகத்திற்கிடமான பேரங்களை நீங்கள் கண்டால், கவனமாக இருங்கள், அவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version