கனமழை பெய்து வருவதால் நாட்டில் சீரற்ற வானிலை நிலவுகிறது
![கனமழை பெய்து வருவதால் நாட்டில் சீரற்ற வானிலை நிலவுகிறது #1 UAE Tamil News Website https://www.tamilgulf.com/wp-content/uploads/2024/03/weather.jpeg Today the weather will be partly cloudy; Chance of rain in some areas](https://www.tamilgulf.com/wp-content/uploads/2024/03/weather-780x470.jpeg)
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் மேகமூட்டமான வானம் மற்றும் பலத்த மழையுடன் இன்று காலை எழுந்தனர், ஐக்கிய அரபு எமிரேட் முழுவதும் நிலையற்ற வானிலை குறித்து வானிலை துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மழை பெய்து வருகிறது.
துபாயில் உள்ள அல் கைல் சாலையில் அதிகாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வேலைக்குச் செல்லும் வழியில் பலத்த மழையை எதிர் கொண்டனர். நகரின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியது.
பர்ஷாவில் லேசான மழை மற்றும் துபாய் எக்ஸ்போவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷார்ஜாவில் வசிப்பவர்களும் தங்கள் வார இறுதியை மழையுடன் தொடங்கினர்.
NCM-ன் முன்னறிவிப்பின் படி, இன்று வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில கடலோர மற்றும் மேற்குப் பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டத்துடன் இருக்கும். இடைவெளியில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
அரேபிய வளைகுடா பகுதியில் கடல் அலை சிறிது முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.
நாட்டின் உள் பகுதிகளில் வெப்பநிலை 15ºC ஆகக் குறையும் மற்றும் அதிகபட்சமாக 37ºC ஐ எட்டும்.
Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.