Site icon Tamil Gulf

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,249 கைதிகளை விடுவிக்க UAE துணைத் தலைவர் உத்தரவு

Dubai Women Establishment

Dubai:
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நாட்டின் 52வது யூனியன் தினத்திற்கு முன்னதாக, அமீரகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,249 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

துபாயின் அட்டர்னி ஜெனரல் சான்சிலர் எஸ்ஸாம் இசா அல் ஹுமைதான் இதுபற்றி கூறுகையில், “ஷேக் முகமதுவின் இந்த நடவடிக்கை விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்கவும், சமூகத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளவும், அவர்களது குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவும் வாய்ப்பளிக்கும் அவரது ஆர்வத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.

ஷேக் முகமதுவின் உத்தரவை அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை துபாய் காவல்துறையுடன் இணைந்து துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் தொடங்கியுள்ளது என்று அல் ஹுமைதான் மேலும் கூறினார்.

Exit mobile version