Site icon Tamil Gulf

விபத்தில் காயம் அடைந்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பாதசாரிகளுக்கு அபராதம்

6,000 dirham per month compensation for interns seeking employment

Dubai:
துபாயில் நடந்த விபத்தில் காயம் அடைந்த ஒரு ஓட்டுனர் மற்றும் இரண்டு பாதசாரிகள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. துபாய் போக்குவரத்து நீதிமன்றம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கத் தவறியதற்காக அரேபிய ஓட்டுநரை தண்டித்தது, அதே நேரத்தில் ஆசிய பாதசாரிகள் சாலையில் கடக்க கூடாத பகுதியில் கடந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டுநருக்கு 2,000 திர்ஹமும் பாதசாரிகளுக்கு தலா 400 திர்ஹமும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது மற்றும் பிற சாலைப் பயணிகளை மதிக்காதது விபத்துக்கு காரணமாக அமைந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதசாரிகளுக்கு ஏற்பட்ட காயங்களை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

விபத்துக்கு வழிவகுத்த அவர்களின் நடவடிக்கைகளுக்கு இரண்டு ஆசிய நபர்களையும் நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. பாதசாரிகள் கடக்க கூடாத பகுதியில் சாலையைக் கடந்ததற்காக மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தண்டிக்கப்பட்டனர். அவர்களின் நடவடிக்கையால் வாகனம் மோதியது மட்டுமின்றி ஓட்டுநரின் வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டது.

Exit mobile version