அமீரக செய்திகள்

துபாயில் பலியான 2 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தது.

துபாய் நாட்டில் அல் ராஸ் என்ற இடத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த இந்தியர்களில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரபிக் (45), இமாம்காசீம் (36) என்பது தெரியவந்துள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசின் முயற்சியால், 2 பேரின் உடல்கள் துபாய் தலைநகர் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இறந்தவர்களின் உடலுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தி, முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி அவர்களது குடும்பத்தனருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button