Site icon Tamil Gulf

ஐபிஎல் 2024 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அபார வெற்றி

Gulf News Tamil

ஐபிஎல் 2024 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி அணி, முதல் 4 ஓவர்களில் 40 ரன்களை அடித்த நிலையில், அதன்பிறகு 42 ரன்களை எட்டியபோது, 3 விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பியது. தொடர்ந்து, கோலி (21), கிரீன் (18) ஆகியோரும் சொதப்பி ஆட்டமிழக்க, இறுதிக் கட்டத்தில், அனுஜ் ராவத் (48), தினேஷ் கார்த்திக் (36) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 173/6 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கேவில், களமிறங்கிய அனைவரும், தங்களால் முடிந்த சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஓபனர்கள் ருதுராஜ் (15), ராசின் ரவிந்திரா (35) ஆகியோர் ஓரளவுக்கு சிறந்த துவக்கத்தை கொடுத்தனர்.

அதன்பிறகு, ரஹானே (27), டேரில் மிட்செல் (22) ஆகியோரும் ஆட்டமிழந்த நிலையில், இறுதிக் கட்டத்தில், ஷிவம் துபே (34), ரவீந்திர ஜடேஜா (25) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 176/4 ரன்களை அடித்து, அபார வெற்றியைப் பெற்றது.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.

Exit mobile version