செலவு குறைந்த மேக விதைப்பு நீர் பாதுகாப்பை வழங்குகிறது- உயர் அதிகாரி கருத்து

மேக விதைப்பு போன்ற புதுமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் தண்ணீர் பற்றாக் குறையை திறம்பட சமாளிக்க ஒரு உந்து சக்தியாக உள்ளது என்று அபுதாபியில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப் படி, உலகளாவிய நன்னீர் தேவை 2030 ஆம் ஆண்டளவில் விநியோகத்தை 40 சதவிகிதம் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 பில்லியன் மக்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு கடுமையான தண்ணீர் பற்றாக் குறையை அனுபவிக்கிறார்கள்.
NCM ன் டைரக்டர் ஜெனரலும், உலக வானிலை அமைப்பின் (WMO) தலைவருமான டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ், நம்பகமான நீர் ஆதாரங்கள் “சமூகம், விவசாயம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான விஷயம்” என்று குறிப்பிட்டார்.
மார்ச் 22 அன்று கடைபிடிக்கப்பட்ட உலக தண்ணீர் தினத்தை குறிப்பிட்டு அல் மண்டூஸ் கூறுகையில், “நிலையான, சமமான மற்றும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் வகையில் தண்ணீரை திறம்பட ஒதுக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் புதிய வழிகளை சர்வதேச சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. உப்பு நீக்கம் மற்றும் கிரேவாட்டர் மறுசுழற்சி போன்ற தீர்வுகள் சாத்தியமான விருப்பங்கள் என்றாலும், மழை மற்றும் நிலத்தடி நீர் அதிகரிக்க சமூகங்களுக்கு உறுதியான தீர்வுகள் தேவை” என்றார்.