Site icon Tamil Gulf

COP28: அபுதாபி முதன்முறையாக துபாய்க்கு 24/7 இன்டர்சிட்டி பஸ் சேவையை வழங்குகிறது

'Green' bus service launched in Abu Dhabi

COP28:
அபுதாபி முதன்முறையாக துபாய்க்கு 24/7 பேருந்து சேவையை இயக்குகிறது, தற்போது இந்த சேவையானது நடந்து கொண்டிருக்கும் COP28-ன் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகிறது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் ஏ-ல் இருந்து எக்ஸ்போ சிட்டி துபாயில் உள்ள COP28 இடம் வரை ஒன்பது பேருந்துகள் தினமும் 44 பயணங்களை மேற்கொள்கின்றன.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் பசுமைப் பேருந்து திட்டத்தின் கீழ் இந்த முயற்சியை தொடங்கியுள்ளது.

“இந்த சேவையை வேறுபடுத்துவது என்னவென்றால் இரண்டு எமிரேட்டுகளுக்கு இடையேயான இன்டர்சிட்டி பஸ் போக்குவரத்தை முதன்முதலில் வழங்குவது மற்றும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் இயங்குவது” என்று ஐடிசியின் திட்டமிடல் துறையின் இயக்குனர் அதீக் அல் மஸ்ரூயி கூறினார்.

ஒரு நாளைக்கு 520 கி.மீ தூரத்தை கடக்கும் இந்த மின்சார பஸ் ஒரு நாளைக்கு 3.7 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உதவுகின்றன.

டிசம்பர் 12 ஆம் தேதி முடிவடையும் COP28க்குப் பிறகு பேருந்துகள் அபுதாபியின் பொதுப் போக்குவரத்துக் குழுவில் ஒருங்கிணைக்கப்படும். அபுதாபியில் பசுமை பேருந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்வதால் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

ஒருங்கிணைக்கப்பட்டவுடன், ஒரு நாளைக்கு சுமார் 3,150 கிமீ தூரம் பயணிக்கும் மற்றும் ஆண்டுக்கு 900 டன்களுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சார பேருந்து சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகும்.

“2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க அபுதாபி அரசாங்கம் அமைத்த திட்டத்தை செயல்படுத்தும் ஒரு விரிவான போக்குவரத்து அமைப்பை நிறுவுவதற்கு இந்த முயற்சி உறுதியளிக்கிறது” என்று அல் மஸ்ரூயி கூறினார்.

Exit mobile version